Thursday, May 14, 2009

இது கண்டனமல்ல....

நவீன புதுகவிதை உலகில் இமாலய உயரத்துக்கு வளர்ந்துவிட்டதாய் மிதப்பில் இருக்கும் திருமதி. அ.வெண்ணிலா அவர்களுக்கு..வணக்கம்.

14-05-09 நாளிட்ட குங்குமம் இதழில் 'மனவிலாசம்'தலைப்பில் உங்கள் பேட்டி கண்டேன். மிக வேடிக்கையாய் இருந்தது தங்களின் ஒரு சில கருத்துகள்.

அதுவும்..நான் குறிப்பிட்டு சொல்வது 'சினிமா'எனும் பெட்டிக்குள் நீங்கள் சொல்லியிருந்த கருத்துகள்.

"எழுத்தை நான் கட்டாயமான ஒன்றாகப் பார்க்கவில்லை.எழுதியே ஆகவேண்டு என்கிற நிர்பந்தமும் எனக்கில்லை.சினிமாவில் பாட்டெழுதுவது என்பது புலிவால் பிடித்த கதை போன்றதுதான். நாம் விரும்புகிற மாதிரி கவிதை எழுதலாம். நான்கு தொகுப்புகள் வெளியிடலாம்.ஆனால்..சினிமாவில் நாம் விரும்புகிற மாதிரி எழுதுவதற்கான சூழல் இல்லை. ஒரு குழுவின் விருப்பத்தை...காதலை..காதலை..காதலை, ஆமாம் அதை மட்டுமே எழுதிக்கொண்டிருக்க வேண்டும். எனது விருப்பங்கள் சார்ந்து படைப்பை அணுகுவதால் சினிமாவை விட்டு விலகியே இருக்கிறேன்."

குங்குமம் வாசகர்களுக்கு வேண்டுமானால் அ.வெண்ணிலா..புதியவராய் இருக்கலாம். இலக்கிய வாசகர்கள்..வெண்ணிலாவின் காரொளியை அறிவார்கள்..தன்னை ஊடகவழி வெளிச்சப்படுத்திக்கொள்ள பரபரப்பாய் ஏதாவது சொல்பவர் என்று.

நீங்கள் கடந்து வந்த பாதை என்ன..?

காதல்திருமணம். அதற்குபின் எழுதிய நான்கு தொகுப்புகளில் 80% கவிதைகள் வெளிப்படுத்தியது காதலைத்தான். அதுவும் ஒவ்வொரு கவிதைக்கும் தங்களின் கணவரோடே சேர்ந்து 'மாடலிங்' போஸ் கொடுப்பது போல படங்கள்.

இப்படிதான் இலக்கிய உலகில் நீங்கள் அடி எடுத்து வைத்தீர்கள். மறந்து விட வேண்டாம்.

வ்ந்தவாசியில் நீங்கள்் பிரபலமானது ஒவ்வொரு நூல் வெளியீட்டுக்கும் சிறப்பு விருந்தினராய் சென்னையிலிருந்து ஆள் பிடித்து கூட்டி வந்த சினிமா கலைஞர்கள்தான்.

உங்களுக்கு விருது தந்து பணமுடிப்பு தந்த நடிகர் பார்த்திபன் கூட சினிமா நடிக்கர்தான்.

சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன் என எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்..? புரியவில்லை.தமிழ்கூறும் நல்லுலகிற்கு இதை நீங்கள் விளக்க வேண்டும்.

சினிமா உங்களிடம் கெஞ்சவில்லை.கெஞ்சவும் கெஞ்சாது..

எப்படி.."காதலை..காதலை..காதலை..." ஏன் காதல் பாட்டெழுதினால் என்ன..? சினிமாவில் காட்டப்படும் காதல் என்ன தண்டவாளத்து மலமா..?

அப்படி எழுதிய கவியரசர். கண்ணதாசன்,வாலி,சுரதா,புலமைப்பித்தன் இவர்களை விட...தாங்கள்......

எத்தனை ஆயிரம் பாட்டுக்கள் எழுதி சினிமாவுக்கு பாட்டெழுதுவது புலிவாலை பிடித்த கதை என்பதை உணர்ந்தீர்கள்..? எட்டாத பழம் புளிக்கும் கதையா இது..?

"ஒரு குழுவின் விருப்பத்தை.." சினிமாவைப் பற்றி ஏதாவது தெரியுமா..?54 வெவ்வேறுபட்ட பிரிவுகள் கொண்ட கடல் அது.இயக்குனர் என்பவர் மாலுமி.அவரது கற்பனைக்கேற்ற சூழலுக்குதான் பாடல் எழுத முடியும். அங்கு உங்கள் சொந்த பாட்டெல்லாம் எடுபடாது. அதுக்கு நீங்க சொந்த படம்தான் எடுக்கணும்.

சினிமாவுக்கு பாட்டெழுதும் கவிஞரெல்லாம் ஆனாமூனாக்கள் போலவும்..தாங்கள் மட்டும் ஏதோ...வாழ்வில் காதலையே கண்களால்கூட பார்க்காத பாவனை ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. 

பேட்டிக்கு யாரோ வந்தார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது. 

ஒரு பத்திரிக்கை பேட்டி என்றால் நிருபர் அழைத்துவந்த புகைப்படக்காரர் படம் எடுப்பார்..அல்லது பேட்டியெடுக்கப்பட்ட விருந்தாளரே தன்னிடம் உள்ள படத்தை கொடுப்பார். இது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும். குங்குமம் பேட்டியில் தங்களின் மூன்று படங்கள் வந்துள்ளன. அந்த மூன்றாவது படம் சொல்லும் சேதி என்ன..? சினிமாவில் கூட ப்படி ஒரு படம் வந்ததில்லை. இது நீங்களே விரும்பி தந்த படம்தானே..ஒரு கவிஞரின் பேட்டியில் இதுவரை யாராவது இப்படியொரு படத்தை வெளியிட்டுள்ளார்களா..? உங்கள் மேதாவிலாசத்தை படைப்பில் காட்டுங்கள்.

எதையாவது சொல்லி பிரபலமடையலாம் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். பல பெண் கவிஞர்கள் சினிமாவில் இந்த புலியை வென்றிருக்கிறார்கள். வீரமிருந்தால்..அல்லது யாராது வாய்ப்பு கொடுத்தால் நிருபித்து காட்டலாமே தவிர..."காதலை மட்டுமே எழுதச்சொல்வதால் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறேன்" என்றெல்லாம் செவாலியே மாதிரி பேசக்கூடாது.

அப்ப என்ன பாட்டு எழுத முடியுமோ அதை அறிவியுங்களேன். என்னமோ நீங்கதான் பாட்டெழுதணும்னு கோடம்பாக்கமே உங்க வந்தவாசியில் வந்து தவம் கிடக்கிற மாதிரி....

பாட்டெழுதி பேர் வாங்குபவர்களுக்கு மத்தியில்..பாட்டெழுதாமலே பேர் வாங்க முயற்சிக்கும் தங்களின் கருத்துகள்...போல்த்தனமானவை.

உணருங்கள்..அல்லது காலம் அதை உணர்த்தும்.

"வசீகரா.." கவிஞர் தாமரை எழுதிய பாடலை உங்கள் வாய் முணுமுணுத்ததே இல்லையா..?

குங்குமம் நிருபருக்கு நீங்கள் சினிமாவுக்கு பாட்டெழுதாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ பேரிழ்ப்பு போலவும், அந்த இழப்பை அரும்பெரும் கொள்கைக்காக த்ருவதான போலித்தனம் எதற்கு சகோதரி..?

இம்மாதிரியான பேட்டிகள் எல்லாம் நம் வசதிக்கு செய்துகொள்ளும் ஏற்பாடுகள் என்று நமக்கு தெரியாதா..?